இன்று சேர்தளம் வலைப்பூ குழுமர்களின் சார்பில் திருப்பூரில் ஒரு பயிற்சிப்பட்டறை. மதிய நிகழ்வு. ஆர்வம் காரணமாகவே சென்றிருந்தேன். பரிசல்காரன் , வெயிலான், முரளிகுமார் பத்மநாபன் ஆகியோரைச் சந்திப்பேன் என்று தெரியாமல். அறிமுகவுரை நிகழ்த்திய நண்பர்
கடலையூர் செல்வம் வலைப்பூவின் சாத்தியக்கூறுகளைப்பற்றி மிகக்கூர்மையான கருத்துக்களை முன்வைத்தார். all updated. பரிசல்காரன் முன்னிலை வகித்து presentation முறையில் பகிர்ந்துகொண்டார் . பேச்சில் ஆங்காங்கே தன் கலோக்கியல் பஞ்ச்களை வைத்திருந்தார். sema sharp. ஒரு வலை தளம் எப்படித் துவங்குவது என்பதை உதாரணத்தோடு அப்போதே இணையத்தில் செய்து காட்டப்பட்டது. வெண்புரவி என்று ஒரு நண்பர்
வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். மிக விரிவான வகுப்பு என்றே சொல்லலாம். NHBwriter பற்றிய அறிமுகம் கிடைத்தது. ( இடையில் வரும் ந வுக்கு w, ஃ அண்ணாவுக்கு q - மறக்கக்கூடாது). blogging formation and creation இல் முதல் படியாகத்திகழ்கிறது இவ்வகுப்பு. நன்றியுரை சொன்ன வெயிலான் ரமேஷின் வார்த்தைகளில் உள்ளார்ந்த நட்பினை உணரமுடிந்தது. கல்லூரிகள், அமைப்புகள் என இவ்வகுப்பு செல்லவேண்டிய தூரத்தின் அவசியம் உணர்ந்தேன். படிநிலைகளில் இன்னும் சில செப்பநிடல்கள் தேவை. வலைப்பூவின் அமைப்பு மட்டுமின்றி கருத்து ரீதியாகவும் தங்கள் நிலையை சேர்தளம் இனிவரும் காலங்களில் பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்களின் நண்பர்கள் நமக்கும் நண்பர்களே . சேர்தளம் அழகிய மின்களம். செம cute மச்சி.
நன்றி கவின், அழகா சொல்லியிருக்கிங்க....
ReplyDeleteபதிவும் ஆரம்பிச்சிடிங்க, நிறைய எழுதுங்க, என்ன சந்தேகம் என்றாலும் தொடர்பு கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
:-)
வேர்ட் வெரிஃபிகேசனை எடுத்து விடுங்கள். :-)
புதிய நண்பருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி முரளி.
ReplyDeleteமிக்க நன்றி திரு.
ReplyDelete